Tamilstar
Movie Reviews

காக்டெயில் திரை விமர்சனம்

யோகிபாபு காமெடி களத்தில் சிக்ஸர் அடித்து வந்த நிலையில், அந்த குழந்தையே நீங்க தான் என்று அவரை ஏற்றிவிட்டு ஹீரோ கதாபாத்திரம் கொடுக்க ஆரம்பித்தனர், அவருக் கூர்கா, தர்மபிரபு என வண்டியை ஓட்ட, இதில் காக்டெயில் எவ்வளவு தூரம் சென்றது என்பதை பார்ப்போம்.

கதைக்களம்

சோழர் காலத்தில் செய்யப்பட்டு விலை மதிப்பற்ற முருகன் சிலை ஒன்று காணமல் போகிறது, அந்த சிலையை கண்டுப்பிடிக்க போலிஸ் சில திட்டங்களை வகுக்கின்றது.

அதே நேரத்தில் யோகிபாபு முடி திருத்தம் வேலை செய்ய, ஒரு நாள் நண்பர்களுடன் சேர்ந்து சரக்கு அடிக்கின்றனர், விடிந்து பார்த்தால் அவர்கள் ரூமில் ஒரு பெண் இறந்த நிலையில் இருக்கிறார்.

உடனே அதிர்ச்சியாகிய நண்பர்கள் அதை மறைக்க, இவர்கள் ஒரு திட்டத்தை போட, பிறகு அந்த பெண் யார், எப்படி இங்கே வந்தார், யார் கொன்றது, முருகன் சிலை என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

யோகிபாபு ஏன் சார் நல்ல தானே போய்ட்டு இருந்துச்சு, திடீர் என்று ஏன் இப்படி என்று தான் கேட்க தோன்றுகின்றது. இன்னும் எத்தனை வருடத்திற்கு பன்ரூட்டி தலையா, பஞ்சர் வாயா என்ற வசனத்தை வைத்து ஓட்டுவது.

படத்தில் ஒரு காட்சி கூட நமக்கு சிரிப்பு என்பதே வரக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட காமெடி படம் போல் உள்ளது.

இதில் கலக்கப்போவது யாரு பிரபலங்களை பயன்படுத்தியது நல்ல ஐடியா என்றாலும், அவர்கள் ஏதோ 2 மினிட்ஸ் அதற்குள் காமெடி செய்யுங்கள் என்பது போல் காமெடி செய்துவிட்டு செல்கின்றனர்.

படத்தின் பட்ஜெட் மிக குறைவு என்பது கேமரா ஒர்க்கில் இருந்து தெரிகிறது, யோகிபாபு கால்ஷிட் கிடைத்தால் போதும் என்று அதை வைத்து முடிந்த வரை இழுத்து செல்ல முயற்சிக்குக் மற்றொரு ஏமாற்றம் தான் இந்த காக்டெயில்.

க்ளாப்ஸ்

டைட்டில் கார்ட் செம்ம இண்டரஸ்ட் ஆக உட்கார வைக்கிறது, மற்ற ஏதுமில்லை.

பல்ப்ஸ்

டைட்டில் கார்ட் தவிர வேறு ஏதுமில்லை, கிளைமேக்ஸில் வரும் புகழ் மற்றும் பாலா கொஞ்சம் சிரிக்க வைக்க முயற்சிக்கின்றனர்.

மொத்தத்தில் பெயர் தான் காக்டெயில், உள்ளே பச்சை தண்ணி கூட இல்லை.