தமிழ் சினிமாவில் தி லெஜன்ட் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகி உள்ளார் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன்.
இவரது நடிப்பில் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் உருவாக்கி உலகம் முழுவதும் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்த போதிலும் வசூல் திதியாக படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது என சொல்லலாம்.
முதல் நாளில் உலகம் முழுவதும் இரண்டு கோடி வரை வசூல் செய்த இந்த படம் இதுவரை மொத்தம் 12 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சரவணன் நடிக்க உள்ள திரைப்படம் இன்டர்நேஷனல் லெவலில் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.