தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் பிரபல காமெடியனாக மட்டுமின்றி சிறந்த கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் அண்மையில் வெளியான பொம்மை நாயகி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் சிறுவயதில் இருந்து கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தால் அவ்வப்போது கிரிக்கெட் பிராக்டீஸ் செய்து வருகிறார். அந்த வகையில் யோகி பாபு லேட்டஸ்டாக கிரிக்கெட் பிராக்டீஸ் செய்து கொண்டிருக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
— Yogi Babu (@iYogiBabu) February 10, 2023