கோலிவுட் திரை வட்டாரத்தில் பிரபல காமெடி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் யோகி பாபு. இவர் இல்லாத படகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து பிரபல முன்னணி நடிகர்களின் படங்களிலும் காமெடி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கிறார். மேலும் சில படங்களில் கதாநாயகனாகவும் அசத்தி வரும் யோகி பாபு தனது கைவசம் எக்கச்சக்கமான பட வாய்ப்புகளை வைத்திருக்கிறார்.
இப்படி பிசியான நடிகராக இருக்கும் யோகி பாபு படப்பிடிப்பு தளத்தில் வேற லெவலில் வெறித்தனமாக கிரிக்கெட் ஆடி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். அந்த சூப்பரான வீடியோவை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தனது சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
— Yogi Babu (@iYogiBabu) September 12, 2022