Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பூஜை உடன் தொடங்கிய காமெடி நடிகர் முனீஸ்காந்த் திரைப்படம்.! வைரலாகும் புகைப்படங்கள்

Comedy Actore Munishkanth Movie Pooja Stills Update

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் தான் முனிஸ்காந்த். இவர் முண்டாசுப்பட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து மாநகரம், குலேபகாவலி 2, ராட்சசன், போன்ற பல படங்களில் நடித்துள்ள இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு என்று சொல்லலாம்.

இந்நிலையில் இவர் தற்போது முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதாவது இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் எழுதி இயக்கும் படமான ‘மிடில் கிளாஸ்’என்ற படத்தில் கதாநாயகனாக முனீஸ்காந்த் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் விஜயலட்சுமி அகத்தியன், ராதா ரவி, மாளவிகா அவினாஷ், வேல ராமமூர்த்தி, வடிவேல் முருகன், குரைஷி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்க உள்ள இப்படம் நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி நகைச்சுவை கலந்த திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் 27- ஆம் தேதி தொடங்கி, ஒரே ஷெட்யூலில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தற்போது இப்படத்திற்கான பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comedy Actore Munishkanth Movie Pooja Stills Update
Comedy Actore Munishkanth Movie Pooja Stills Update