Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காமெடி படத்தில் களம் இறங்கிய ஜெய் பீம் புகழ் மணிகண்டன்

comedy film-based-on-jai-bhim-fame-manikandan

விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஜெய் பீம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த மணிகண்டன் முதல் முறையாக தனி கதாநாயகனாக நடித்து முடித்து இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்குகிறார்.

இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பசிலியான் தயாரித்து இருக்கின்றனர். படத்தில் மணிகண்டன் உடன் முக்கிய கதாபாத்திரங்களில் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

படத்தின் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் ஆக இயக்குநர் எஸ். பி. சக்திவேல் பணிபுரிந்துள்ளார். மேலும் படத்தின் ஒளிப்பதிவை ஜெயந்த் சேதுமாதவன், படத்தொகுப்பை பரத் விக்ரமன், கலை இயக்கத்தை ஸ்ரீகாந்த் ஆகியோர் மேற்கொள்கின்றனர். இன்று பெரும்பாலானோர் அவதிப்படும் ‘குறட்டை’ பிரச்சனையை மையமாக வைத்து நகைச்சுவையுடன் இணைந்த ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக்கி இருக்கின்றனர்.

சென்னையை சுற்றி ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கின்றனர். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

‘ஜெய்பீம்’ புகழ் மணிகண்டன் நடிக்கும் புதிய நகைச்சுவை திரைப்படம்

 comedy film-based-on-jai-bhim-fame-manikandan

comedy film-based-on-jai-bhim-fame-manikandan