இயக்குனர் சிம்பு தேவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’. இந்த படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
திகில், ஃபான்டசி கலந்த திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பெரும் பொருட்செலவில் பழங்கால அரங்குகள் அமைத்து நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ‘நல்ல ஸ்கிரிப்ட் லாரன்ஸ் இல்ல சுந்தர்.சி கிட்ட சொன்னா சினிமால நல்ல பெயர் கிடைக்கும்’ போன்ற காமெடியான வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
So thrilled for you to see the super fun trailer if #AGS24 titled #ConjuringKannappan ▶️https://t.co/1VXN02NatG Produced by@Ags_production#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh
Directed by @selvinrajxavier @archanakalpathi @aishkalpathi @venkat_manickam…
— AGS Cinemas (@agscinemas) November 4, 2023