Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகையின் காலில் முத்தமிட்ட சர்ச்சை இயக்குனர்… திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

Controversial director kissing actress' feet

இந்தி, தெலுங்கு படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. இவர் சூர்யா நடித்த ‘ரத்த சரித்திரம்’ தெலுங்கு படத்தை இயக்கியவர். இந்தப் படம் தமிழிலும் வந்தது. பின்னர் சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை கதையையும் இயக்கி வெளியிட்டார்.

தற்போது சர்ச்சைக்குரிய கதைகளை இயக்கி தனது ஓடிடி தளத்தில் வெளியிட்டு வரும் இவர், சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், தற்போது நடிகை ஒருவரின் காலில் முத்தமிடும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அந்த நடிகையின் பெயர் சோனியா நரேஷ் என்றும், அந்த புகைப்படத்தை மற்றொரு நடிகையான நைனா கங்கூலி எடுத்ததாகவும் ராம் கோபால் வர்மா குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான நெடிசன்கள் அவரை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.