நடிகைகள் சினிமா வாய்ப்புகளை பிடிக்க சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று கடற்கரையில் நீச்சல் உடையிலும் அரைகுறை ஆடைகளுடனும் சுற்றும் புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர்.
இந்த வரிசையில் பிரியா ஆனந்தும் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இவர் தமிழில் வாமணன், எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வைராஜா வை, எல்.கே.ஜி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இரண்டு கன்னட படங்களில் நடித்து வருகிறார்.
பிரியா ஆனந்த் சூரிய உதயத்தில் கவர்ச்சியாக நின்று போஸ் கொடுப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு சூரிய உதயமும் புதிய வழியை காண்பதற்கு உதவுகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.
கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள். பிரியா ஆனந்த் ஆடை அணிந்துள்ளாரா இல்லையா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் பேசி வருகிறார்கள்.