தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. சமையலும் காமெடியும் கலந்த நிகழ்ச்சியான இந்த நிகழ்ச்சியில் இதுவரை மூன்று சீசன் முடிவடைந்து உள்ளது.
இந்த நிலையில் விரைவில் நான்காவது சீசன் தொடங்கப்பட இருப்பதாக ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. வழக்கம் போல நடுவர்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் பங்கு பெற ரக்சன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.
பழைய கோமாளிகள் சுனிதா உட்பட சிலர் மட்டுமே பங்கேற்கின்றனர். புதிய கோமாளியாக ஜிபி முத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஆனால் ப்ரோமோ வீடியோவில் புகழ்பெற்ற கோமாளிகளான புகழ் பாலா சிவாங்கி உள்ளிட்டோர் இடம் பெறவில்லை.
இதனால் இந்த சீசனில் அவர்கள் கோமாளிகளாக பங்குபெற மாட்டார்களா என்ற ஏக்கமும் ஏமாற்றமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.