தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இருந்து இயக்குனர், தயாரிப்பாளர், நடுவர் வெங்கடேஷ் பட் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறிய நிலையில் தாமுவும் வெளியேறுவதாக அறிவித்து பிறகு தன்னுடைய பதிவை நீக்கிவிட்டார்.
இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனுக்கான ப்ரோமோ ஷூட்டிங் நடந்து முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் நடுவராக தமிழ் சினிமாவின் ஹீரோவும் மிகவும் பிரபலமான செப்புமான மாதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்று இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனால் இந்த முறை குக் வித் கோமாளி நிகழ்ச்சி வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
