தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி அதன் பின்னர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் மணிமேகலை.
அதுமட்டுமல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் கோமாளியாக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். பெற்றோர்கள் சம்மதம் இல்லாததால் தன்னுடைய காதலர் உசைன் என்பவரை வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். youtube சேனல் தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். உசைன் டான்ஸராக இருந்தாலும் மணிமேகலைக்கு நடனம் வராது. அப்படி இருக்கையில் இருவரும் சேர்ந்து திருச்சிற்றம்பலம் படத்தில் டிரெண்டிங் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து பலரும் மணி நீயா இப்படி என ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
View this post on Instagram