விஜய் இப்படி பண்ணுவாரு என்று நினைக்கவில்லை என்று பேசியுள்ளார் குக் வித் கோமாளி மோனிஷா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது.
அதனை தொடர்ந்து H வினோத் இயக்கத்தில் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கசக்கமாக இருந்து வருகிறது.
மேலும் பூஜா ஹெக்டே,மமீதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல்,குக் வித் கோமாளி மோனிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் குறித்து சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் மோனிஷா.
அதாவது ஜனநாயகன் படத்தின் பூஜைக்கு என்னை அழைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை அதிலும் நான் கடைசி வரிசையில் தான் உட்கார்ந்து இருந்தேன் முதல் வரிசையில் இருந்த அனைவருக்கும் விஜய் வணக்கம் வைத்து சென்றார். நான் கடைசியில் அமர்ந்ததால் அப்படியே சென்று விடுவார் என்று நினைத்தேன் ஆனால் கடைசிவரை வந்து கை கொடுத்து வரவேற்றதை கண்டு அதிர்ச்சியாகிவிட்டேன் அவர் படத்தில் நடிப்பது பெரிய விஷயம் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.
