விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் தான் புகழ். இந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட புகழ் தனது நகைச்சுவையை தாறுமாறாக வெளிப்படுத்தி அனைவரது மனதிலும் இடம் பிடித்து தற்போது வெள்ளி திரையிலும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது பிசியான நடிகராக வலம் வரும் புகழ் “ஜூ கீப்பர்” என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இவர் நீண்ட நாளாக காதலித்து வந்த பென்சியா என்கின்ற பெண்ணை செப்டம்பர் 1ஆம் தேதி காலை சிறப்பாக இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரபல நடிகரும், இயக்குனருமான சசிகுமார் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் மற்ற திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை புகழ் மற்றும் பென்சியாவுக்கு சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து வந்தனர். இதையடுத்து புகழ் சற்று நேரத்திற்கு முன்பு மறைந்த வடிவேல் பாலாஜியை குறித்து உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அதில் அவர், மறைந்த காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி உடன் தான் இருக்கும் ஓவியத்தை , தன் மனைவியுடன் சேர்ந்து வணங்கிய படி நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ”இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மாமா…உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்துல அடுத்த கட்டத்துல அடியெடுத்து வைக்கிறேன். உங்க ஆசிர்வாதம் எப்பவும் எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும்னு நம்பறேன்.எப்பவும் என் கூட தான் இருப்பீங்க, கண்டிப்பா நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்னு அந்த கடவுள வேண்டிக்கிறேன் மாமா” என்று உருக்கமான பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
View this post on Instagram