தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்த நிகழ்ச்சியின் கிரான்ட் பைனல் வரும் சனி, ஞாயிறு தினங்களில் ஒளிபரப்பாக உள்ளது. இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருக்கு பரிசு தொகை எவ்வளவு என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது முதல் இடத்தை பிடித்து டைட்டிலை வெல்பவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு இரண்டாவது இடத்தை பிடிப்பதற்கு 5 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. அடேங்கப்பா இவ்வளவு பெரிய தொகையா என ரசிகர்கள் இந்த தகவலால் ஆச்சரியமடைந்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக மைம் கோபி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் விசித்ரா இரண்டாவது இடத்தை பிடித்திருப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது, இது எந்த அளவிற்கு உண்மை என்பது வரும் சனி ஞாயிறு தினங்களில் தெரிந்து விடும்.
