காமெடியாக பேசி பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார் தீபா அக்கா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான Mr and Mrs சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருபவர் தீபா. சின்னத்திரை சீரியலிலும் வெள்ளித் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். தற்போது இவர் கடை ஒன்றில் ஷாப்பிங் சென்று விட்டு அங்கு ரசிகர்களுடன் செம கலாட்டா செய்துள்ளார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இவர் தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் தான் ஷாப்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.