தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
ஒவ்வொரு வரவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் முதல் பைனலிஸட் யார் என்பது தெரிய வர உள்ளது.
மேலும் இது குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாக அதில் சிவாங்கி தான் முதல் பைனலிஸ்ட்டாக இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
கையில் பேண்ட் கட்டி விட்ட வெங்கடேஷ் பட் இனி நீ சூப்பர் சிங்கர் ஷிவாங்கி இல்லை, குக் வித் கோமாளி செஃப் ஷிவாங்கி என பாராட்டி உள்ளார்.