கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிட்டு படக்குழு அப்டேட் ஒன்று கொடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு படக்குழு படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
It's a super wrap for #Coolie 🔥@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @PraveenRaja_Off pic.twitter.com/ulcecQKII1
— Sun Pictures (@sunpictures) March 17, 2025