தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் அஜித், விஜய், சூர்யா என பெரும்பாலான நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர்.
தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே இருந்து வரும் தமன்னா தன்னுடைய பெற்றோர்களுக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் விரைவில் நலம் பெறுவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். பெற்றோர்களை தவிர மற்ற யாருக்கும் வீட்டில் தொற்று பாதிப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமன்னாவின் இந்த பதிவை பார்த்த காஜல் அகர்வால், சமந்தா, ராசி கண்ணா, இ குப்தா உள்ளிட்ட நடிகைகள் அவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆறுதல் கூறியுள்ளனர். மேலும் தமன்னாவின் பெற்றோர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) August 26, 2020