Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ

Corona awareness video released by RRR film crew

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்தின் இயக்குனர் ராஜமவுலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், அலியா பட் ஆகியோர் கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இதில் பொது மக்கள் பாதுகாப்புடன், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசி அனைவரும் போட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.