தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது பத்து தலை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் நடிகர் சிம்பு கோகுல் இயக்கத்தில் உருவாக இருந்த கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.
ஆனால் தற்போது பத்து தல படத்தில் கவனம் செலுத்தி வருவதன் காரணமாக கொரோனா குமார் படத்தில் நடிக்க முடியாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
அதே போல் கோகுலும் தற்போது ஆர் ஜே பாலாஜியை வைத்து சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்த கையோடு அவர் கொரோனா குமார் படத்தை இயக்க இருப்பதாகவும் அதில் நாயகனாக லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.