உலகையே ஆட்டிப்படைத்து கொண்டு வரும் கொரோனா வைரஸ் எனும் நோய்தொற்று பல உயிர்களை காவு வாங்கி கொண்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல உலக நாடுகள் இறங்கியுள்ளது.
அந்தவகையில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இதுவரை வெளியிட்ட கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகளில் இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்றவை இருந்தன.
தற்போது நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சில முக்கியமான 6 புதிய கொரோனா அறிகுறிகளை வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஒருவரை கொரோனா வைரஸ் தாக்கியிருந்தால், வைரஸ் உடலில் நுழைந்த 2-14 நாட்களுக்குப் பிறகு இந்த அறிகுறிகள் தோன்றக்கூடும் என சிடிசி தெரிவித்துள்ளது.
அந்தவகையில் அந்த ஆறு அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- நீங்கள் காரணமின்றி குளிர்வது போன்று உணர்ந்தால், அது கொரோனா வைரஸின் அறிகுறியாக இருக்கலாம்.
- திடீரென்று காரணமே இல்லாமல் உடல் குளிர்ச்சியுடன், உங்கள் உடல் நடுங்க ஆரம்பித்தால் இதுவும் கொரோனாவின் புதிய அறிகுறிகளுள் ஒன்று.
- சில நாட்களாக எந்த கடுமையான வேலையையும் செய்யாமல் தசை வலி பயங்கரமாக இருந்தால், உங்களை உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதுவும் இதன் அறிகுறி ஆகும்.
- கொரோனா ஒருவரைத் தாக்கியிருந்தால், கண்களின் மேல் மற்றும் நெற்றிப் பகுதியில் கடுமையான வலியை சந்திக்கக்கூடும். இதுவும் கொரோனாவின் அறிகுறியாகும்.
- கொரோனா வைரஸ் ஒருவரைத் தாக்கினால், கடுமையான வறட்டு இருமலை மட்டும் உண்டாக்குவதோடு, வைரஸ் தாக்கத்தினால், தொண்டைப்பகுதியில் அழற்சியை உண்டாக்கி வலியையும் உண்டாக்கும்.
- திடீரென்று உங்கள் மூக்கும், நாக்கும் வேலை செய்யாமல் போவதை உணர்ந்தீர்களானால் கொரோனாவின் அறிகுறி ஆகும். ஏனென்றால், கொரோனா அறிகுறிகளுள் சுவை மற்றும் வாசனை இழப்பும் முக்கியமான ஒன்று.