Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இயக்குனர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Court notice to Director Bala

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சி.எஸ்.கே. புரோடக்சன் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் 2015-ம் ஆண்டு விசித்திரன் என்ற தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்து, கடந்த மார்ச் மாதம் வரை புதுப்பித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ‘விசித்திரன்’ என்ற அதே டைட்டிலை பயன்படுத்தி ‘பி ஸ்டுடியோ’ நிறுவனத்தின் மூலம் இயக்குநர் பாலாவும், இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷூம் திரைப்படம் தயாரித்து வருகின்றனர். மேலும் ஆர்.கே.சுரேஷ் அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

தனது ‘விசித்திரன்’ தலைப்பில் படத்தை தயாரிக்க தடைவிதிக்கக் கோரி சதீஷ்குமார் சென்னை 14-வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு குறித்து ‘பி ஸ்டுடியோ’ நிறுவனத்தின் உரிமையாளரான இயக்குநர் பாலா மற்றும் இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஜோசப் படத்தின் தமிழ் ரீமேக் விசித்திரன் திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை மலையாளத்தில் இயக்கிய எம்.பத்மகுமாரே இயக்கியுள்ளார்.