Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயன் இல்லைனா இன்று நான் இல்லை.?? ஓபன் ஆக பேசிய கிரிக்கெட் வீரர்.!!

cricket player Sachin Siva About actor Sivakarthikeyan

தமிழகத்தைச் சார்ந்த கிரிக்கெட் வீரர் சச்சின் சிவா. இவர் கிரிக்கெட்டே வேண்டாம் என முடிவெடுத்த தருணத்தில் சிவகார்த்திகேயன் கொடுத்த ஊக்கமும் தனக்கு அளித்த சப்போர்ட் பற்றியும் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

2019-ல் கிரிக்கெட் வேண்டாம் என முடிவெடுத்தேன் அப்போது சிவகார்த்திகேயன் அண்ணா என்னை வர சொல்லி இருந்தாரு. என்னுடன் கிட்டதட்ட 45 நிமிடங்கள் பேசினார். கிரிக்கெட்டு வேண்டாம் என முடிவு செய்தேன். என்னுடைய குடும்பம் ரொம்ப கஷ்டப்படுது என கண்ணீர் விட்டு அழுதேன்.

அப்போது அவர் தான் இன்னொரு முறை முயற்சி செய்யுங்கள் ஒரு வருடம் பயிற்சி எடுங்க நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும் என ஊக்கப்படுத்தினார். அது மட்டுமல்லாமல் அதுவரைக்கும் நீங்க வேலைக்கு போனா என்ன சம்பளம் வாங்குவீர்களோ அதை நான் கொடுத்து சப்போர்ட் பண்றேன் நீங்க கிரிக்கெட் மட்டும் விளையாடுங்க என ஊக்கப்படுத்தி இன்னைக்கு வரைக்கும் எனக்கு சம்பளம் கொடுத்து கொண்டிருக்கிறார்.

அவர் மட்டும் இல்லனா நான் 2019-ல் கிரிக்கெட்டை விட்டு விலகி எங்கேயாவது வேலை பண்ணிக்கிட்டு இருந்திருப்பேன் அப்படி இல்லன்னா ஒரு கடை வைத்து பொட்டலம் போட்டுக்கிட்டு இருந்திருப்பேன் என பேசி உள்ளார்.

இவர் பேசிய இந்த வீடியோவை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி சிவகார்த்திகேயன் செய்த உதவியை பாராட்டி வருகின்றனர்.