வெள்ளரிக்காய் பயன்படுத்தி முடி வளர்ச்சி அடைவது எப்படி என்று பார்க்கலாம்.
பொதுவாக வெள்ளரிக்காய் கோடை காலங்களில் அதிகம் சாப்பிடும் உணவாகும். இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் வெள்ளரிக்காயை பயன்படுத்தி நம் சருமம் மற்றும் கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளையும் நீக்க பயன்படுத்தலாம்.
முதலில் இரண்டு வெள்ளரிக்காயை எடுத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து அதன் சாற்றை பிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு முடியில் வேர்ப்பகுதியில் இருந்து சிறிது சிறிதாக சாற்றை முழுவதுமாக தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து தலை முடியை ஷாம்பு போட்டு கழுவ வேண்டும்.
மேலும் வெள்ளரிக்காய் சாறுடன் எலுமிச்சை சாறு பயன்படுத்தி கூந்தலில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பிறகு முடியை கழுவி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தலையில் உள்ள பொடுகு பிரச்சனை முற்றிலும் நீங்கும்.
இதனைத் தொடர்ந்து வெள்ளரிச்சாறில் தயிர் கலந்து முடியில் தடவி வந்தால் பல முடி பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கொடுப்பது மட்டுமில்லாமல் கூந்தலை பளபளப்பாகவும் வைத்திருக்கும்.
முதலில் ஒரு கப்பில் வெள்ளரிச்சாறு எடுத்து அதில் இரண்டு டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கி தயாரான அந்த பேக்கை தலைமுடியில் முழுவதுமாக தடவி அரை மணி நேரத்திற்கு பிறகு ஷாம்பு போட்டு கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முடி பளபளப்பாக இருப்பது மட்டுமில்லாமல் முடி வளரவும் உதவும்.
இந்த ஹேர் பேக்கை நாம் ஒரு வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைத்து முடி வளர்ச்சி அதிகமாகும்.