உடல் எடையை குறைக்க வெள்ளரிக்காய் பயன்படுகிறது.
இன்றைய கால கட்டத்தில் பொதுவாகவே உடல் எடை பிரச்சனை அனைவருக்கும் உண்டு. உடல் பருமனால் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்களை சந்திக்க நேரிடும். இது மட்டும் மில்லாமல் உடல் எடையை குறைக்க பல்வேறு டயட்களும் உடற்பயிற்சிகளையும் செய்வது வழக்கம். அப்படி உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெள்ளரிக்காய் சாப்பிடலாம்.
இதில் இருக்கும் ஊட்டச்சத்து உடல் எடையை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. நீரேற்றம் நிறைந்த காயாக கருதப்படும் வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் உடல் எடை மட்டுமில்லாமல் உடலுக்கும் அது ஆரோக்கியத்தை கொடுக்கிறது அது குறித்து பார்க்கலாம்.
இது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடுவது மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. குறிப்பாக எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
எனவே ஆரோக்கியம் நிறைந்த வெள்ளரிக்காய் உணவில் சேர்த்த உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.