தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. மூன்றாவது சீஸனில் கிராண்ட் பினாலே நாளை நடைபெற உள்ளது.
ஏற்கனவே ஷூட் முடிந்த நிலையில் ஸ்ருதிகா டைட்டிலை வென்றார் என தெரிய வந்தது. மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை தர்ஷன், அம்மு அபிராமி ஆகியோர் வென்றதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
இரண்டு சீசன்ககளாக டைட்டில் வின்னருக்கு ரூ 5 லட்சம் பரிசாக அளிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த முறை அந்த பரிசுத்தொகை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது நிகழ்ச்சி ஒளிபரப்பானால் தான் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.