Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் தகவல்..

CWC 3 Upcoming Episode Details

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. 10 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் அவர்களில் நான்கு பேர் வெளியேற்றப்பட்டு 6 போட்டியாளர்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரியில் மேலும் இரண்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மே 13ம் தேதி வெளியாகவுள்ள டான் படத்தின் பிரமோஷனுக்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார் என தெரியவந்துள்ளது.

இதனால் வரும் சனி, ஞாயிறு கிழமைகளில் இந்த நிகழ்ச்சி ஜாலியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

CWC 3 Upcoming Episode Details
CWC 3 Upcoming Episode Details