தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
மூன்றாவது வாரத்திலேயே இந்த நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் நடைபெற உள்ளது. இதுகுறித்து வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் இயக்குனர் கிஷோர், காளையன் மற்றும் ஷெரின் உள்ளிட்டோர் குறைந்த மதிப்பெண்களுடன் டேஞ்சர் சோனில் உள்ளனர்.
இவர்களில் ஒருவரே இந்த இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வாய்ப்பு உள்ள நிலையில் கிஷோர் தான் வெளியேறப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உண்மையில் வெளியேறப் போவது யார் என்பது இந்த வார எபிசோடில் தெரிந்து விடும்.