தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதுவரை ராகுல் தாத்தா, மனோ பாலா, அந்தோனி தாஸ் உள்ளிட்டோர் எலிமினேஷன் ஆகியிருந்த நிலையில் இந்த வாரமும் எலிமினேஷன் ரவுண்ட் நடைபெற்றது. கடைசியில் ரோஷினி மற்றும் சந்தோஷ் ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் இடம் கிடைத்து கடைசியாக இருவருக்குமிடையே போட்டி நடைபெற்றது.
இருவரும் நன்றாகவே சமைத்துத் இருந்த நிலையில் சந்தோஷமாக விளையாட்டுக்கு நீ போகணும்னா போகணும்னு சொல்லிக்கொண்டாலும் நான் போனால் கூட பரவாயில்லை ஆனால் ரோஷினி போகக் கூடாது என கண் கலங்கி அழுதார். ரோஷினி அவருக்கு தன் பங்கிற்கு நான் போனாலும் பரவாயில்லை சந்தோஷ் போகக்கூடாது என்னை விட அவர் நன்றாக சமைப்பார் என கண் கலங்கினார்.
இந்த இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பதை அறிவித்தாக வேண்டும் என நடுவர்கள் கூறி யாருக்கு ஸ்வீட் கொடுக்கிறோமோ அவர்கள் சேப் என கூறினர். வெங்கடேஷ் பட் அவர்கள் சந்தோஷுக்கு ஸ்வீட் கொடுக்க ரோஷினி வெளியேறுகிறார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசியில் செப் தாமு அவர்கள் ரோஷினிக்கு ஸ்வீட் கொடுத்து நோ எலிமினேஷன் என கூறினார். சந்தோஷ் கண்கலங்க தொடங்கியதும் செட்டில் இருந்தவர்கள் அனைவரும் கண் கலங்கினர். நடுவர்கள் உட்பட அனைவருமே கண் கலங்கி அழுதனர். பிறகு எலிமினேஷன் இல்லை என அறிவித்ததும் அனைவரும் உற்சாகமாக கொண்டாடினர்.