தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சந்தோஷ் பிரதாப். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் சார்பட்டா படத்தில் திறமையான நடிப்பை கொடுத்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் சந்தோஷ் 10 தல படத்தில் சிம்புவின் தங்கையின் கணவராக நடித்திருப்பார்.
இந்த படத்தில் நடித்தது குறித்து இவர் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது முதலில் பத்து தல படத்தில் ஏன் நடித்தேன் என ஃபீல் பண்ணினேன்.
ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகு பலரும் படத்தை பார்த்துவிட்டு என்னுடைய நடிப்பை பாராட்டிய போது சந்தோஷமாக இருந்தது என தெரிவித்துள்ளார். மேலும் நான் சிம்புவுடன் இணைந்து நடித்தது பற்றி வீட்டில் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருந்தேன் என தெரிவித்துள்ளார்.
சந்தோஷ் பிரதாப்பின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.