தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. இதனைத் தொடர்ந்து இவர் தற்போது வெள்ளித்திரையில் நாயகியாக படங்களில் நடித்து வருகிறார்.
காமெடி நடிகர் சதீஷ்க்கு ஜோடியாக நாய் சேகர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தாயின் மரணம் குறித்து பதிவு செய்துள்ளார்.
தன்னுடைய அம்மா மரணம் அடைந்து ஒரு வாரம் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ள அவர் தாயாரின் நினைவுகள் இன்னும் தனது மண்டைக்குள் சுற்றிக் கொண்டிருப்பதாக பதிவு செய்துள்ளார். நீங்கள் ஏன் இவ்வளவு சீக்கிரம் சென்றீர்கள் என வருத்தப்பட்டுள்ளார்.
மேலும் கடந்த ஐந்து வருடங்களாக நீங்க பட்ட வலியும் வேதனையும் இனி இருக்காது, என கண்ணீர் மல்க பதிவு செய்துள்ளார். இதனால் பவித்ராவின் அம்மா உடல் நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ள நிலையில் மரணம் அடைந்துள்ளார் என்பது தெரிய வருகிறது.
பவித்ராவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
View this post on Instagram