Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“யாரும் தவறாக நினைக்க வேண்டாம்”விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட புகழ்

cwc-pugazh-apologised-to-thalapathy vijay-fans

தமிழ் சின்னத் துறையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக பங்கேற்று வருபவர் புகழ்.

இவர் சமீபத்திய எபிசோடில் கில்லி பட விஜய் கெட்டப்பில் வருகை தந்திருந்தார். ஆனால் வழக்கம் போல புகழை எல்லோரும் அடித்து உதைத்தனர். அதிலும் குறிப்பாக ஸ்ருஷ்டி, வெங்கடேஷ் பட் ஆகியோர் புகழைப் புரட்டி எடுத்தனர்.

இந்த நிலையில் புகழ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் ரத்தம் இவர்கள் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். யாரும் தவறாக நினைக்க வேண்டாம் அனைத்தும் கற்பனையே என தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த மகேந்திரன் பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்படி ஒன்னு சொல்லிடு என நக்கலாக கமெண்ட் அடித்துள்ளார்.