Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜெயிலில் இருந்து மாஸாக வெளியே வந்த புகழ்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

CWC Pugazh Latest Video

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியான ‘அது இது எது’ என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் புகழ். ஆனால் அவரை பிரபலமாக்கியது “குக்கு வித் கோமாளி” என்ற நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சியை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட புகழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார். இந்நிகழ்ச்சியின் மூலம் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் புகழுக்கு உருவாகியது.

அதில் அஜித்துடன் வலிமை, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், சந்தானத்துடன் சபாபதி, ஆர்.ஜே. பாலாஜியுடன் வீட்ல விசேஷம் என பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து “Mr zoo keeper” என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், புகழ் ஜெயிலில் இருந்து வெளியே வரும் வீடியோ ஒன்றை புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். என்ன காரணம் என்று பார்த்தால் இந்த வீடியோ அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்பிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ என்று தெரியவந்துள்ளது. இந்த வீடியோவில் புகழ் ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார். இந்த வீடியோ ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.