தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவாங்கி. அதன் பின்னர் குக் வித்து கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வந்த இவர் தற்போது ஒளிபரப்பாகி வரும் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு முதல் ஆளாக பைனலுக்கு சென்றுள்ளார்.
இதற்கு இடையில் சமூக வலைத்தள பக்கங்களில் ரசிகர்களின் கவனத்தை அவ்வப்போது கவர்ந்து வரும் இவர் தற்போது பயமின்றி புலியுடன் அமர்ந்து செல்லமாக தடவி கொடுக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதனை ரசிகர்கள் ரசித்து வைரலாக்கி வருகின்றனர்.
View this post on Instagram