விஜய் டிவியில் ஒளிபரப்பான “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவாங்கி தனது பாடலின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையாடித்தார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் பங்கேற்று சிவாங்கி தனது நகைச்சுவையினால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானது மட்டுமின்றி தனக்கென தனி இடத்தையும் பிடித்து விட்டார் என்றே சொல்லலாம்.
தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்று இருக்கும் சிவாங்கி இதற்கிடையே சில படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “டான்” திரைப்படம் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து வடிவேலுக்கு மகளாக “நாய் சேகர் ரிட்டன்ஸ்” திரைப்படத்தில் தற்போது நடித்துகொண்டிருக்கும் சிவாங்கி அடுத்தடுத்த புதிய படங்களிலும் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் கோமாளியாக போடும் கெட்டப் போட்டோக்களையும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ஷேர் செய்து வருவார். அந்த வகையில் தற்போது “தெறி” படத்தில் வரும் சமந்தாவை போல அச்சு அசலாக கெட்ட போட்டிருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இதனை ரசிகர்கள் ரசித்துப் பார்த்து வருவதோடு இணையத்தில் வைரலாக்கியும் வருகின்றனர்.
View this post on Instagram