விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து அனைவருக்கும் பரிச்சயமானவர் சிவாங்கி. இவர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் நடித்திருந்ததை தொடர்ந்து சமீபத்தில் வெளியான வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் தனது அழகான குரலால் பல பாடல்களை அசத்தலாக பாடி வெள்ளி திரையில் பிரபல பின்னணி பாடகியாகவும் வளர்ந்து வரும் இவர் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் பலவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவார்.
அந்த வகையில் சமீபத்தில் சிவாங்கி பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷல் அவர்களை சந்தித்து பேசியுள்ள வீடியோவை பதிவிட்டிருக்கிறது. அதில் ஸ்ரேயா கோஷல் அவர்கள் தான் சிவாங்கியின் அனைத்து வீடியோக்களையும் பார்த்ததாகவும் அவர் மிகவும் திறமையானவர் என்றும் புகழ்ந்து பேசியுள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்த சிவாங்கி ஷ்ரேயாகோஷல் மேம் மிக்க நன்றி நீங்கள் எனக்கு வாழ்நாள் நினைவை தந்துள்ளீர்கள் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
🥺 @shreyaghoshal mam thankyou so much you have given me a lifetime memory❤️ pic.twitter.com/FY2xpYHSzn
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) December 19, 2022