Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

உங்களுக்கு என்ன ஜாலியான செலிபிரிட்டி வாழ்க்கை..ரசிகரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த ஷிவாங்கி

CWC shivangi-reply-to-fan-negative-comment

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து “குக் வித் கோமாளி”நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று ரசிகர் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து பல படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சிவாங்கி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்டனாக போட்டோக்கள் எடுத்து பதிவிட்டு வருவார்.

அதற்கு பல ரசிகர்கள் அவர்களின் கருத்துக்களை கமெண்ட் செய்து வருவர். தற்பொழுது ஒரு ரசிகர் சிவாங்கியை கமெண்டின் மூலம் கடுப்பாக்கியுள்ளார். அதாவது அவர் “உங்களுக்கு என்ன ஜாலியான செலிபிரிட்டி வாழ்க்கை. எங்களுக்கு அப்படியா? நாங்கள் மிடில்க்ளாஸ் குடும்பம். தினமும் மிகவும் கஷ்டப்படுகிறோம்” என்று கமெண்ட் செய்துள்ளார்.

அதற்கு பதில் கூறும் விதமாக, சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ செலிபிரிட்டி வாழ்க்கை என்பது மிகவும் எளிதானது அல்ல. உங்களுக்கு எது பிடிக்கும் இது பிடிக்குமா என ஒவ்வொரு முறை சிந்தித்து நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். உங்களுக்கு பிடிக்கும் வரைதான் நாங்கள் இங்கேயே இருப்போம். இல்லை என்றால் நாங்கள் இங்கு இருக்க மாட்டோம் கஷ்டங்கள் என்பது எல்லோருக்கும் இருக்கும். அதற்கு செலிபிரிட்டி, நடுத்தர வர்க்கம், ஏழைகள என்று வித்தியாசம் தெரியாது. என்று தனது ஆழமான கருத்தினை அந்த ரசிகருக்கு பதிலாகபதிவிட்டுள்ளார்.

CWC shivangi-reply-to-fan-negative-comment
CWC shivangi-reply-to-fan-negative-comment