Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குக் வித் கோமாளி செட்டில் துல்கர் சல்மானுடன் பைக்கில் சுற்றி வந்த சிவாங்கி.. வைரலாகும் வீடியோ

CWC Shivangi With Dulquer Salman

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி இரண்டாவது சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வாரம் விற்கான நிகழ்ச்சியில் ஏய் சினாமிகா படத்துக்காக துல்கர் சல்மான், அதிதி ராவ் மற்றும் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உள்ளனர்.

இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த வீடியோவில் துல்கர் சல்மானுடன் சிவாங்கி பைக்கில் ஜாலியாக செட்டை சுற்றியுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மேலும் சிவாங்கி துல்கர் சல்மானை பார்த்து நீ எங்க வேணாம் போ ஆனால் என்னையும் கூட கூட்டிட்டு போ என்று டயலாக் எல்லாம் பேசி அசத்தியுள்ளார்.