தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இந்த வார எபிசோடுக்கான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. போட்டியாளர்கள் அனைவரும் ஆனந்தமாய் இருந்த நிலையில் தாமு அவர்கள் எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க ஒரு தப்பு நடந்திருச்சு என சொல்ல அனைவரும் கண் கலங்கி அழுகின்றனர்.
என்ன காரணம் ஏன் அழுகிறாய் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதுகுறித்த எபிசோட் வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சமூக வலைதளங்களில் 1 ஏப்ரல் ஃபூல் ப்ராங்காக இருக்கும் என கூறி வருகின்றனர். இல்லையென்றால் தாமு அவர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து விடை பெற்றுக் கொள்வார் எனவும் சொல்கின்றனர். விஷயம் என்ன என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.