தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் டி. இமான். இவர் தற்போது நாய்கள் ஜாக்கிரதை, டெடி, மிருதன் போன்ற படங்களை இயக்கிய சக்திசவுந்தர ராஜன் இயக்கியுள்ள ‘கேப்டன்’ என்ற படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
இதில் ஆர்யா கதாநாயகனாகவும் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மேனன் நடித்துள்ளார் . இப்படத்திற்கு யுவா அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இதனைத்தொடர்ந்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படம் செப்டம்பர் 8 ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தகவலை வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் இப்படத்தில் இசையமைக்கும் டி. இமான் அவர்கள் மதன் கார்க்கி எழுதியுள்ள மெலோடி பாடலை முன்னணி இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இமான் அவர்கள் தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களின் இடையே பரவி வருகிறது.
Immense Joy to Record Dear brother Yuvanshankar Raja for ShaktiSounder Rajan’s next directorial #Captain Starring Arya and Aishwarya Lekshmi in the lead! Lyric by Madan Karky! A Breezy Melodious song coming your way soon! Audio on Thinkmusic!
A #DImmanMusical
Praise God! pic.twitter.com/eJL5W2VRvL— D.IMMAN (@immancomposer) June 10, 2022