Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“சிவகார்த்திகேயன் எனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம்”: டி இமான் பேச்சு

d-imman latest speech-goes-viral

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி. இமான். இவர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி. இமான் பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக டி.இமான் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர், “இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம். அவர் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது.

அதனால் இனி வரும் காலங்களில் அவருடன் சேர்ந்து பயணிக்க இயலாது. ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் நானும் இசையமைப்பாளராக இருந்து, அவரும் நடிகராக இருந்தால் நடக்க வாய்ப்புள்ளது. இது நான் மிகவும் கவனத்துடன் எடுத்த முடிவு. அந்த துரோகத்தை நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். இது குறித்து அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். ஆனால் அவரது பதிலை என்னால் சொல்லமுடியாது. சில விஷயங்களை நான் மூடி மறைக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் குழந்தைகளின் எதிர்காலம் தான்\” என்று கூறினார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’, ‘சீமராஜா’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ உள்ளிட்ட படங்களுக்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இந்த படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் – டி.இமான் கூட்டணி இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

d-imman latest speech-goes-viral
d-imman latest speech-goes-viral