தமிழ் சினிமாவில் ஒரு பிரமிக்க வைக்கும் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது இந்த ஆண்டு வெளியாக இருக்கும் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக விளங்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வந்த இவர் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனுஷின் அடுத்த படமான “டி 50” திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி வைரலானது.
அதாவது நடிகர் தனுஷ் அவரது ஐம்பதாவது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி இருப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்திருந்தது . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாக இருக்கும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பால முரளி, துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.
இந்நிலையில் இதுவரை நீண்ட முடியும் தாடியுடன் இருந்த தனுஷ் சமீபத்தில் திருப்பதிக்கு சென்று மொட்டை அடித்து வந்திருந்ததை தொடர்ந்து தற்போது அதே லுக்கில் D50 படப்பிடிப்பு தளத்திற்கு சென்று இருக்கிறார். அதன் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
Recent Snap Of Dhanush From #D50 Shooting Spot 🔥
Currently Dhanush, SJ Suriya & Sundeep Kishan Portions are under shoot with commissioner office setup. Something Big Is Brewing up 🥵💣 @dhanushkraja 👑👑 pic.twitter.com/SQs1xbtL4T
— Arun Vijay (@AVinthehousee) July 7, 2023