18 ரீல் மற்றும் ஹாண்ட்மேட் ஃபில்ம் தயாரிப்பில் சந்தானம், யோகிபாபு மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் துணை இயக்குனராக பணிபுரிந்த விஜய் ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “தகால்டி”.
கதை சுருக்கம்:
தான் கற்பனையில் வரையும் ஓவியத்தில் உள்ள பெண்ணை எங்கு இருந்தாலும் தேடிப்பிடித்து அனுபவிக்கிறான் சாம்ராட் (வில்லன்). இதில் நம் நடிகை மாட்டிக்கொள்ள அவரை கொண்டு வரும் நபருக்கு 10 கோடி என கூற அதில் நமது ஹீரோ எப்படி உள்ளே வந்தார் கடைசியில் நடிகை என்ன ஆனார் என்பது மீதி கதை.
முதல் பாதி:
ஆரம்ப காட்சிகள் நன்றாகவே தொடங்கியது படமும் நன்றாகவே அமையும் என எதிர்பார்த்த நமக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. சந்தானத்தின் காமெடி முதல்பாதியில் எங்கேயும் எடுப்பதில்லை. புதுமுகம் ரிட்டிக சென் வரும் காட்சிகள் ஓகே. யோகி பாபுவின் திரைப்படம் வாரம் ஒருமுறை வருவதால் என்னவோ அவர் நடித்த சில காட்சிகள் சலிப்பு தட்டியது.
இரண்டாம் பாதி:
முதல்பாதியில் ஏமாற்றமாக இருந்தது இரண்டாம் பாதி எப்படி இருக்க போகிறதோ என முனுமுனுப்பு இருந்தாலும் முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதி ஓகேவாக இருந்தது. படம் முடிவில் சில காமெடிக்கு பலர் சிரித்தனர். படத்தின் பிளஸ் இது ஒன்றாகத்தான் இருக்கும் என்பது எங்களின் தனிப்பட்ட கருத்து.
இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தும் சிலிர்க்கும்படி இல்லாவிட்டாலும் நன்றாக இருக்கிறது.
தமிழ் ஸ்டார் – 2/5