உலகம் முழுவதும் நேற்று அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் திருவிழா போல இந்த படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர்.
குறிப்பாக சென்னையில் பிரபல திரை அரங்கத்தில் கூடியிருந்த அஜித் ரசிகர்கள் அந்த வழியாக வந்த பால் வண்டியை மடக்கி அதில் இருந்த தயிரை பால் என நினைத்து அதைத் திருடிச் சென்று அபிஷேகம் செய்து உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பால் முகவர்கள் சங்கத் தலைவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் அஜித்துக்கு கோரிக்கை மற்றும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதாவது கடந்த முறை விவேகம் திரைப்படம் ரிலீஸ் ஆனபோது உங்களை சந்தித்து பேச முயற்சி செய்தோம். பால் அபிஷேகம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பேச நினைத்தோம். ஆனால் உங்களின் மேனேஜர் சுரேஷ் அஜித் அவர்களுக்கு ரசிகர் மன்றம் இல்லை கலைத்து விட்டார் அதனால் அவர் எந்தவித அறிக்கையையும் வெளியிட மாட்டார் என கூறிவிட்டார்.
நீங்கள் ரசிகர் மன்றத்தை கலைத்து இருந்தாலும் உலகம் முழுவதும் உங்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்களின் படம் வெளியாகியது பாலபிஷேகம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது நிறுத்தவில்லை. ரசிகர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பை நீங்கள் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். நான் ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டேன் எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என நீங்கள் தப்பிக்க முடியாது. இந்த பிரச்சனையில் தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில் பிரபல திரையரங்க வாசலில் ரசிகர்கள் அந்த வழியாக வந்த வண்டியில் இருந்து தயிரை திருடிய சம்பவத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.