தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவிக்கு அடுத்தபடியாக பிரபலமான தொலைக்காட்சி சேனலாக இருந்து வருகிறது ஜீ தமிழ்.
இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. இதனால் சேனலும் புதுப்புது சீரியல்களை களத்தில் இருக்கும் வேலையை கையில் எடுத்துள்ளது.
விரைவில் நெஞ்சை கிள்ளாதே என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ள நிலையில் மேலும் ஒரு புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆமாம் மலையாளத்தில் ஒளிபரப்பாகி மெகா ஹிட்டான மிழி ராண்டிலம் ( mizhirandilum ) என்ற சீரியல் தான் ரீமேக்காக உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இதில் ஹீரோவாக டான்ஸ் ஜோடி டான்ஸ் பிரபலம் குரு நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக ஸ்ரீப்ரியா நடிக்க போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram