தென்னிந்தியத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நாயகியாக நடித்தவர் மீனா. அஜித், விஜய், ரஜினி, கமல் என பல நடிகர்களோடு இணைந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
சாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட மீனாவிற்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறாள். இப்படியான நிலையில் உடல் நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் சாகர் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார். இவருடைய மறைவு தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் கலா மாஸ்டர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மீனாவின் கணவர் மரணத்திற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். மும்பையில் புறா எச்சம் இருந்தால் சுவாசித்தாலே தப்பு என சொல்வார்கள். பெங்களூரில் அது அதிகமாகவே இருக்கும். இந்த எச்சத்தை சுவாசிப்பதால் சிலருக்கு தான் பிரச்சினை வரும். எதிர்பாராத விதமாக அந்த பிரச்சனை சாகருக்கு வந்து விட்டது என தெரிவித்துள்ளார். இதுவே அவருடைய மரணத்திற்கு காரணமாகிவிட்டது என தெரிவித்துள்ளார்.
