தமிழ் சினிமாவில் மாறுபட்ட வில்லனாக 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் பிடித்திருப்பவர் டேனியல் பாலாஜி.
மறைந்த நடிகரான முரளியின் தம்பியானது இவர் தன்னுடைய நடிப்பால் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடிப்புள்ள இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கொட்டிவாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவு செய்தியை கேட்டதும் இயக்குனர் வெற்றிமாறன், கௌதம் மேனன், அமீர் என பலர் ஹாஸ்பிடலுக்கு விரைந்துள்ளனர். டேனியல் பாலாஜியின் கண்களை தானம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கண் தானத்தின் மூலமாக டேனியல் பாலாஜி இறந்த பின்னரும் இந்த உலகில் வாழ உள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றன.
