தமிழ் சின்னத்திரையில் முள்ளும் மலரும், செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை தான் தர்ஷா குப்தா. இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ஃபாலோவர்ஸை வைத்திருக்கும் தர்ஷா குப்தா பட வாய்ப்புகளை அதிகரிக்க அடிக்கடி கவர்ச்சி உடைகளில் விதவிதமாக போட்டோ ஷூட் செய்து வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார். அந்த வகையில் அவர் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பூங்குழலியின் கதாபாத்திரத்தின் அலங்காரத்தில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்து இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
View this post on Instagram