Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தசரா படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்

dasara movie box office collection update

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடித்துள்ள ‘தசரா’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘தசரா’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளில் ரூ.38 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.